தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறை எடுத்துக் கொள்வதற்கு வாய்ப்பு
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசு அறிவித்திருக்கும் இரண்டு நாட்கள் விடுமுறை, பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீபாவளி அன்று (31.10.2024) மற்றும் அதைத் தொடர்ந்து வரும் நாள் (01.11.2024) ஆகிய இரண்டு நாட்களும் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஆசிரியர்கள், மாணவர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் தங்கள் குடும்பத்துடன் இணைந்து பண்டிகையை கொண்டாடலாம். இந்த கூடுதல் விடுமுறை, குறிப்பாக சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பும் பயணிகளுக்கு பெரிதும் உதவியாக இருக்கும். இருப்பினும், இந்த கூடுதல் விடுமுறையை ஈடு செய்யும் வகையில், நவம்பர் 9, 2024 அன்று சனிக்கிழமை பணி நாளாக செயல்படுத்தப்படும். #தமிழகஅரசுதீபாவளி விடுமுறைநாள் அறிவிப்பு
Comments